செய்திகள்

சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள் சங்கத்தினரால் இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சமுர்த்தி நிறுவனத்திற்குச் சொந்தமான நிதியை தனது அரசியல் நண்பர்களுக்கு வழங்கியதாகக் கூறியும்  மற்றும் சமுர்த்தி திட்டத்தை சீர்குலைப்பதாகவும் இ சமுர்த்தி ஊழியர்களுக்கு சேமலாபம் வழங்காமல் இருப்பதாகவும் இ உறுதி அளித்தபடி மோட்டார் சைக்கிள்களை வழங்காமல் இருப்பதாவும் தெரிவித்தே குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.