செய்திகள்

சஜின்வாசின் பிணைமனு ஜூலை மாதத்துக்கு ஒத்திவைப்பு

பாராளுமன்ற உறுப்பினரும் கடந்த  அரசாங்கத்தில் ஜனாதிபதியின் மனிதஉ ரிமைவிவகாரத்துக்கான  முன்னால் அமைச்அதிகாரியினூடாக சஜின்வாஸ் குணவர்த்தன பிணைமனு கோரி விண்ணப்பித்திருந்தார்.

தனது உடல்நலன் கருதி பிணை வழங்குமாறு அவர் குறிப்பிட்டிருந்தார் அதனை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் சஜின்வாசின் மருத்துவ அறிக்கையை கொழும்பு சட்டவைத்திய அதிகாரியினூடாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு கட்டளையிடப்பட்டுள்ளது.

இதனால் ஜூலை 3 ஆம் திகதிக்கு பிணை மனு விசாரணை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி செயலகத்தின் சுகாதாரபிரிவுக்கு சொந்தமான 23 வாகனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் சஜின்வாஸ் கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது