செய்திகள்

சஜின்வாஸ் வராததால் அவரது மனைவியிடம் விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவிற்கு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும், அவர் அங்கு சமூகமளிக்கவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவின் மனைவியிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று விசாரணை நடத்தியுள்ளது.

சுகயீனம் காரணமாக இன்று ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராவதற்கு முடியாதென சஜின் டி வாஸ்  அறிவித்திருந்ததாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்தது.

ஆணைக்குழு முன்னிலையில் நாளை ஆஜராவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.