செய்திகள்

சஜின் வாசுக்கு பிணை: கடவுச்சீட்டும் முடக்கம்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜன் வாஸ் குணவர்தன, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பிலான தகவல்களை வெளியிடாமைக்கு எதிரான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

அத்துடன், அவருடைய கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் கையளிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு செப்டெம்பர் 05ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அவருடைய கடவுச்சீட்டை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவும் தடைச்செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.