செய்திகள்

சடடக் கல்லூரி மாணவரைத் தாக்கிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை

பேலியகொட பொலிஸ் நிலையத்தில் சட்டக் கல்லூரி மாணவரைத் தாக்கிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.இந்த தாக்குதல் தொடர்பாக ஒரு தலைமை காவல் ஆய்வாளர் மற்றும் பேலியகொட பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட மூன்று கான் ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்துடன் தொடர்புடைய பேலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகளை தண்டனை மற்றும் சித்திரவதை சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பேலியகொடை பொலிஸ் அதிகாரிகள் கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி அன்று மிகார குணரத்ன என்ற சட்டத்துறை மாணன் மீது தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகின்றது.இவ்வாறு தாக்கப்பட்ட மாணவன் மத்திய மாகாண முன்னாள் ஆளுநர், ஜனாதிபதி ஆலோசகர் மைத்ரி குணரத்னவின் மகன் மற்றும் சட்டத்தரணி சரித குணரத்னாவின் சகோதரர் என அடையாளம் காணப்பட்டார்.மேலும் சந்தேக நபர்களை தண்டனைச் சட்டம் மற்றும் சித்தரவதை சட்டத்தின் கீழ் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் சட்டமா அதிபர் அறி வுறுத்தல் வழங்கியுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங் கிணைப்பாளரும், சட்டத்தரணியுமான நிஷார ஜயரத்ன தெரி வித்துள்ளார்.(15)