செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் அன்புமணி ராமதாஸ்

சட்டமன்ற தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ். மேலும் பாமக தலைவர் ஜி.கே.மணி மேட்டூர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது. பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 117 பேர் கொண்ட இரு வேட்பாளர் பட்டியல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து 90 வேட்பாளர்கள் கொண்ட மூன்றாவது பட்டியல் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் இன்று வெளியிடப்பட்டது.

மீதமுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுகிறார் அன்புமணி என்பது குறிப்பிடத்தக்கது.

N5