செய்திகள்

சட்டம் அனைவருக்கும் பொதுவானது! பொன்சேகா கருத்து

இலங்கையில் ஆட்சியாளர் மட்டுமன்றி, ஆட்சியாளரின் அப்பாவாக இருந்தாலும் சட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஏதாவது குற்றம் தொடர்பாக ஆட்சியாளர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றத்திற்கோ அல்லது குற்றப் புலனாய்வு விசாரணை பிரிவிற்கோ அழைக்கப்பட்டால்,அங்கு செல்ல வேண்டியது அவர்களின் கட்டாய தேவையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் சட்டத்திற்கு தலை குனிய பழகிக்கொள்ள வேண்டியதே நல்லாட்சி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் இது குறித்து இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை எனவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.