செய்திகள்

சட்டம் ஒழுங்கு நாட்டில் பேணப்படவில்லை என்பதனையே வித்தியாவின் கொலை உணர்த்துகின்றது : சுசில் பிரேமஜயந்த

நாட்டில் முறையாக சட்டம் , ஒழுங்கு பேணப்படவில்லை என்பதனையே புங்குடுதீவு மாணவியான வித்தியாவின் கொலை சம்பவம் எடுத்துக்காட்டுவதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரான சுசில் பிரேமஜயந்தவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
யாழ்பாணத்தில் கொடுரமான முறையில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு மாணவியொருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிப்பதுடன், அந்த மாணவியின் பெற்றோருக்கு எமது அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இதேவேளை நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு முறையாக பேணப்படவில்லை என்பதனையே இந்த கொலை சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது என கருதுகின்றோம். சட்டம் ஒழுங்கை பேணவென அமைச்சொன்று உள்ளது. அந்த அமைச்சே பொலிஸாரை வழிநடத்துகின்றது. ஆனால் அது முறையாக செயற்படுத்தப்படாத நிலைமையே காணப்படுகின்றது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அந்த அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.