செய்திகள்

சட்டவிரோதமாகக் கொண்டு சென்ற தேயிலைத் தூள் லொறிகளுடன் நால்வர் கைது (படங்கள்)

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலையிலிருந்து கம்பளை வரை சட்டவிரோதமாக லொறி இரண்டில் பாவனைக்கு உதவாத தேயிலை உற்பத்தியின் போது கடைசியாக வீசப்படும் தூசி என அழைக்கப்படும் தேயிலை கழிவினை 05.06.2015 அன்று இரவு தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் பத்தனை போகாவத்தை பகுதியில் வைத்து திம்புள்ள பத்தனை பொலிஸார் சந்தேகப்பட்டு விசாரணைக்குட்படுத்திய பின் சுற்றி வளைத்தனர்.

விசாரணையின் போது சட்டவிரோதமாக இக்கழிவு தேயிலை தூளை கொண்டு சென்றது தெரியவந்துள்ளது.

குறித்த விசாரணைக்குப் பின்பு இரண்டு லொறியிலும் நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாவனைக்கு உதவாத 14900 கிலோ கழிவு தேயிலை தூள்ளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்த சந்தேக நபர்களை 06.06.2015 அன்று அட்டன் நீதிமன்றத்தில்

ஆஜர்ப்படுத்துவதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

DSC09877

DSC09884

DSC09886

DSC09887