செய்திகள்

சட்டவிரோதமாக கடல்வழியாக வெளிநாட்டுக்குச் செல்லவிருந்த இருபது பேர் கைது

நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கடல்வழியாக வெளிநாட்டுக்குச் செல்லவிருந்ததாக இருபது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ஒன்பது பேரும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த தலா நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், வாழைச்சேனை, புத்தளம் மற்றும் வத்தளை பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவரும் என 20 பேர் கைதாகியுள்ளனர்.

கொண்டாச்சிக்குடா வீதித் தடையில் நான்கு முச்சக்கர வண்டிகளைச் சோதனை செய்தபோதே குறித்த இருபது பேரும் கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல அந்தப் பகுதிக்கு வந்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவர்களில், இரு சிறுவர்கள் மற்றும் நான்கு பெண்களும் உள்ளடங்குகின்றனர்.இவர்கள் மன்னார், சிலாவத்துறை பகுதியில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.(15)