செய்திகள்

சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட 12 பேர் கைது

பொகவந்தலாவ கெசல்கமுவ ஆற்றில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட 12 பேரை பொகவந்தலாவ பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர்.

இலங்கை இரத்தினகல் மற்றும் ஆபரண அதிகார சபையின் மூலம் மாணிக்க கல் அகழ்விற்காக செப்பல்டன் தோட்ட பகுதியை தொழிலாளர்களுக்கு அரசு குத்தகை அடிப்படையில் வழங்கியுள்ளனர்.

எனினும் குறித்த தோட்ட பகுதிக்கு அருகாமையில் கெசல்கமுவ ஆற்றில் சட்டவிரோதமாக இவ்வாறு மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அகழ்வில் ஈடுப்பட்டவர்கள் பலாங்கொடை மற்றும் பொகவந்தலாவை பகுதியை சேர்ந்தவராவர்கள்.

அத்தோடு மாணிக்ககல் அகழ்வுக்கு பயன்படுத்திய உபகரணங்களை பொகவந்தலாவ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாகவும் இவர்களுக்கு எதிராக அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் சமரவிக்கிரம தெரிவித்தார்.