செய்திகள்

சட்டவிரோத துப்பாக்கிகளை அரசிடம் கையளிப்பதற்கு காலக்கெடு

சட்டவிரோதமாக வைத்திருக்கும் துப்பாக்கிகளை அரசிடம் கையளிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது.

அதற்கமைய ஏப்ரல் 25 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 05 ஆம் திகதி வரை இந்த பொது மன்னிப்பு காலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தலொன்றினூடாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் சட்டவிரோதமாக தம் வசம் வைத்திருக்கும் துப்பாக்கிகளை அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது பிரதேச செயலகங்களில் கையளிக்க முடியும் எனவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

n10