செய்திகள்

சட்டவிரோத மண் அகழ்வு, கடத்தல்களில் ஈடுபடும் வாகனங்களை அரசுடைமையாக்கவும்: இளஞ்செழியன் உத்தரவு

யாழ். மாவட்­டத்தின் தீவ­கப்­ப­கு­தியில் சட்­ட­வி­ரோத மண் அகழ்வு மற்றும் கடத்தல் நட­வ­டிக்­கையில் ஈடு­படும் வாக­னங்­களைக் கைப்­பற்றி நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்தி அவற்றை முறை­மை­யாக அர­சு­டை­மை­யாக்கும் நட­வ­டிக்­கையை மேற்­கொள்­ளு­மாறு பொலி­ஸா­ருக்கு யாழ்.மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­சகம் இளஞ்­செ­ழியன் உத்­த­ர­விட்டார்.

நேற்­று­முன்­தினம் இடம்­பெற்ற பிணை மனுக்­கோரல் மீதான விசா­ர­ணை­யொன்றின் போதே மேற்­கண்ட உத்­த­ரவை பொலி­ஸா­ருக்கு நீதி­பதி பிறப்­பித்தார். வேலணை, சாட்டி, மண்­கும்பான் மற்றும் அல்­லைப்­பிட்டி ஆகிய பகு­தி­களில் கட­லோர மண் அகழ்வில் ஈடு­ப­டு­வோரைக் கைதுசெய்தல், மண்கடத்­தலில் ஈடு­படும் வாக­னங்­களைக் கைப்­பற்றி நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்தி அர­சு­டை­மை­யாக்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வேண்டும்.

இத­னை­விட தீவுப்­ப­கு­தியில் வன்­செயல்­களை கட்­டுப்­ப­டுத்தல், சட்­ட­வி­ரோத குற்­றங்கள் புரி­வோரைக் கைதுசெய்து நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்தும் நட­வ­டிக்­கையை பொலிஸார் எடுக்­க­வேண்டும்.

தீவுப் ­ப­கு­தி­யி­லி­ருந்து யாழ்ப்­பாணம் நோக்கி கால்­ந­டை­களை இரவு நேரங்­களில் கடத்தும் செயற்­பா­டு­களைக் கட்­டுப்­ப­டுத்­த­வேண்டும். இதனைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு பொலிஸ் உயர் அதி­கா­ரி­க­ளு­ட­னான கலந்­து­ரை­யாடல் மூலம் மண்­டை­தீவுச் சந்தி அல்­லது பண்ணைச்சந்­தியில் பொலிஸ் காவ­ல­ரணை அமைக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

தீவுப்­ப­கு­தியில் பனை மரங்கள் வெட்­டு­ப­வர்கள் மீது நட­வ­டிக்கை எடுத்தல் மற்றும் வெட்­டிய பனை மரங்­களை கடத்தும் வாக­னங்­களைக் கைப்­பற்றி சட்­ட­ரீ­தி­யாக அர­சு­ட­மை­யாக்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.

ஊர்­கா­வற்­றுறை, வேலணை ஆகிய பிர­தேச செய­லர்­க­ளுடன் நெருங்கிய தொடர்­பு­களை ஏற்­ப­டுத்தி, கடத்­தல்­களை தடுக்க நிர்­வாக ரீதி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்.

ஊர்­கா­வற்­றுறை, நாரந்­தனை, தம்­பாட்டி பிர­தே­சங்­களில் வாள்­வெட்­டுக்­களில் ஈடு­ப­டு­ப­வர்­களை கைதுசெய்து நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­த­வேண்டும். அபா­ய­க­ர­மாக ஆயு­தங்­களை கையாள்­ப­வர்­களை கைது செய்து நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

ஊர்­கா­வற்­றுறை, புங்­கு­டு­தீவு, வேலணை, மண்­கும்பான், அல்­லைப்­பிட்டி, மண்­டை­தீவு வரை­யி­லான பகுதிகளில் பொலிஸ் ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டு குற்றச் செயல்­களை தடுக்க நட­வ­டிக்கை எடுப்­ப­துடன், மக்கள் விழிப்­புக்­கு­ழுக்­களை ஏற்­ப­டுத்தி குற்­றங்­களை தடுப்­ப­தற்கு பொலிஸ் கட்­டளைச் சட்டம், குற்­ற­வியல் கோவை ஆகி­ய­வற்றின் கீழ் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

சுன்­னாகம் பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரிக்கு நீதி­பதி வழங்­கிய உத்­த­ர­வுகள் வரு­மாறு:

மல்­லாகம், சுன்­னாகம், ஏழாலை பகு­தி­களில் குற்றச்செயல்கள் அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கின்­றன. வீதி­யோர சண்­டித்­த­னங்கள் அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கின்­றன.  அதனை உடன் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அமை­திக்குக் குந்­தகம் விளை­விக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­வோரை குற்­ற­வியல் நட­வ­டிக்கை கோவையின் கீழ் நீதி­மன்­றத்தில் ஆஜர்ப்­ப­டுத்­த­வேண்டும்.

தனியார் கல்வி நிறு­வ­னங்­க­ளுக்குச் செல்லும் பெண் பிள்­ளை­க­ளுக்குப் பின்னால் அலைந்து திரி­ப­வர்கள் மீது அலைந்துதிரிவோர் சட்­டத்தின் கீழ் நட­வ­டிக்கை எடுத்தல், சட்­ட­வி­ரோ­த­மா­கக்­ கூ­டிய 5 பேருக்கு மேற்­பட்ட நபர்கள், குற்­றச்­செ­யல்­களில் ஈடு­ப­டு­வோரை கைது செய்து நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்தல்,- குற்­றச்­செ­யல்கள் நடை­பெறும் பிர­தான பகு­தி­யென பொலிஸ் புல­னாய்வின் மூலம் இனங்கண்டு, அப்பிரதேசத்தில் தொடர் பொலிஸ் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு குற்றச்செயல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.

கத்தி, வாள் வைத்திருக்கும் நபர்களை அபாயகரமான ஆயுதங்கள் வைத்திருக்கும் குற்றச்சாட்டில் கைதுசெய்தல் வேண்டும் ஆகிய உத்தரவுகளை ஊர்காவற்றுறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் ஊர்காவற்றுறை பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு நீதிபதி வழங்கினார்.