செய்திகள்

சட்டவிரோத முதலீட்டுப் பட்டியலில் ஐஸ்வர்யா ராய்…

வெளிநாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் சட்ட விரோதமாக முதலீடு செய்ணதுள்ளவர்கள் பட்டியலை பனாமா சட்ட நிறுவனத்திடம் இருந்து பெற்று மொசாக் பன்சிகா என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், டிஎல்எப் குழுமத்தின் குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு ஜெனிவாவின் ஹச்எஸ்பிசி வங்கியில் ரகசிய கணக்கு வைத்துள்ள 1100 இந்தியர்களின் பட்டியலை சுவிட்சர்லாந்து வெளியிட்டது. இதனால் வெளிநாடுகளில் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில. தற்போது, எண்ணெய் நிறுவனங்களில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியலை பனாமா சட்ட நிறுவனத்திடம் இருந்து பெற்று மொசாக் பன்சிகா வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள ஒன்றரை கோடிக்கும் அதிகமானவர்களின் ரகசிய ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் 500 க்கும் மேற்பட்ட இந்தியர்களும் உள்ளனர். இவர்களில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், டிஎல்எப் ப்ரமோட்டர்ஸ் நிறுவனத்தின் கே.பி.சிங் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர், அப்போலோ டயர்ஸ், இந்தியாபுல்ஸ் நிறுவனத்தின் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, மேற்குவங்கத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஷிஷிர் பஜோரியா, டில்லி லோக்சட்டா கட்சியின் முன்னாள் தலைவர் அனுராக் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியர்கள் தவிர ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாக்., முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ, பாக்.,ன் தற்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களின் பெயர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

N5