செய்திகள்

சட்ட விரோதமான முறையில் பொதுமக்களிடம் நிதி சேகரித்த இரு பெண்களுக்கும் விளக்கமறியல் (படங்கள்)

சிறுவன் ஒருவனுக்கு சிகிச்சையளிப்பதற்கென பொய் கூறி சட்ட விரோதமான முறையில் பொதுமக்களிடம் நிதி சேகரித்த என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரையும் எதிர்வரும் 1ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு அட்டன் பதில் நீதவான் எஸ்.இராஜேந்திரன் உத்திரவிட்டுள்ளார்.

30.05.2015 அன்று அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் போதே அவா் இவ்வாறு உத்திரவிட்டுள்ளார்.

குறித்த பெண்கள் இருவரும் 29.05.2015 அன்று பிற்பகல் அட்டன் நகரில் வைத்து அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் குருநாகல் கல்கமுவ மீகெலாவ பிரதேசத்தை சேர்ந்த எஸ்.பீ.பிரேமாவதி (55 வயது) மற்றும் குசும் குமாரி (40 வயது) என்பவர்களாவர்.

குறித்த சிறுவனின் படத்தில் சிறுவனின் முகத்தை காயமடைந்தது போல் மாற்றம் செய்து சிறுவன் தற்போது அநுராதபுரத்தில் உள்ள சிறுவன் நிலையத்தில் இருப்பதாகவும் அவனை குணப்படுத்த வேண்டும் என கூறி இவ்வாறு நிதியை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

IMG_2010

IMG_1986