செய்திகள்

சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கைகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் கொள்ளைகள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி டபிள்யு.ரசிக சம்பத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சர் உபாலி ஜயசிங்க மற்றும் களுவாஞ்சிகுடி பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சர் சிசிரபெத்ததந்திரி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

வேல்லாவெளி பிரதேசத்தில் நடைபெறும் சட்ட விரோத நடவடிக்கைகள் மற்றும் கொள்ளைச்சம்பவங்களை தடுக்கும் வகையில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

குறிப்பாக பொலிஸார் சிவில் உடையில் வெல்லாவெளி பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் பொலிஸாருக்கு சிறந்த ஒத்துழைப்பு வழங்குவதன் மூலமே சட்ட விரோத செயற்பாடுகள் மற்றும் கொள்ளைகளை தடுத்து குற்றவாளிகளை கைதுசெய்யமுடியும்.

ஆண்மையில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே மூவர் கொண்ட கொள்ளையர்கள் குழுவினர் கைதுசெய்யப்பட்டனர்.இதுபோன்று எதிர்காலத்திலும் பொதுமக்கள் பொலிஸாருடன் இணைந்துசெயலாற்றுவதன் மூலமே குற்றச்செயல்களை கட்டுப்படுத்தமுடியும் எனவும் தெரிவித்தார்.

n10