செய்திகள்

சட்ட விரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு தரகர்கள் தொடர்பாக அறிவிக்கவும்

சட்ட விரோதமான முறையில் கொரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணியாளர்களை அனுப்பும் தரகர்கள் தொடர்பாக தமக்கு அறிவிக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றது.
இதன்படி  0112 87 99 00 அல்லது 0112 87 99 02 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சட்ட விரோதமான முறையில் பிரதேசங்களில் செயற்படும் தரகர்கள் மக்களை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும்.
இவ்வாறாக அனுப்பி வைக்கப்படும் பணியாளர்கள் அங்கு பெரும் பிரச்சினைளை எதிர் நோக்குவதாகவும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.