செய்திகள்

சண்டைக் காட்சியில் அஜீத்துக்கு காயம்

ஏ.எம் ரத்னம் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

நேற்றுமுன்தினம் படப்பிடிப்பில் ஒரு சண்டைக் காட்சியில் அஜித் மற்றும் வில்லன் கபீர் சிங் மோதும் காட்சியின் போது அஜீத்துக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. வலியால் அவதிப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து ஓய்வெடுக்கும்படி கூறியும் அஜித் அவர்கள் பேச்சைக் கேட்காமல், தொடர்ந்து படப்பிடிப்பில் அன்றைய காட்சிகளை முடித்து விட்டுத்தான் சென்றார்.

இந்தப் படத்தில் அஜீத் ஜோடியாக ஸ்ருதியும் தங்கையாக லட்சுமி மேனனும் நடிக்கின்றனர். வில்லனாக கபீர் சிங்கும் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.