செய்திகள்

சதாமின் சொந்த ஊரை மீட்க பாரிய நடவடிக்கை

ஈராக்கிய முன்னாள் ஜனாதிபதி சதாம்குசைனின் சொந்த ஊரான திக்கிரித்தை ஐஎஸ் அமைப்பிடமிருந்து மீட்க ஈராக்கிய படையினர் புதிய இராணுவநடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்
படையினர் திக்கிரித் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், விமானப்படையினரும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் தொலைகாட்சி செய்திகள் தெரிவித்துள்ளன.
ஈராக்கிய தலைநனர் பக்தாத்திலிருந்து 150 கிலோமீற்றர் வடதிசையில் உள்ள இந்த நகரத்தை 2014 இல் ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றியிருந்தனர்.
இந்த தாக்குதலுக்கு முன்னதாக சலாகுடின் பிராந்தியத்தின் இராணுஅதிகாரிகளை பிரதமர் ஹெய்டர் அல் அபாடி சந்தித்துள்ளார். ஐஎஸ் அமைப்பிலிருந்து விலகும் அனைத்து சுனி பழங்குடிஇன தீவிரவாதிகள் அனைவருக்கும் மன்னிப்பு வழங்குவதாக அறிவித்து அவர் இதுவே அவர்களுக்கான இறுதி வாய்ப்பு என தெரிவித்துள்ளார். திக்கரித்தின் சில பகுதிகளிலிருந்து ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தொலைக்காட்சிகள் தெரிவித்துள்ள போதிலும் அதனை உறுதிசெய்ய முடியவில்லை.
சுனி முஸ்லீம்கள் அதிகமாக வாழும் சலாகுடின் பிராந்தியத்தின் பெருமளவு பகுதிகள் தீவிரவாதிகள் பிடியிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஐஎஸ் அமைப்பின் பிடியிலுள்ளஇரண்டாவது முக்கிய நகரம் திக்கிரித் என்பது குறிப்பிடத்தக்கது