செய்திகள்

சதாமின் வலதுகரமாக விளங்கிய அதிகாரி கொல்லப்பட்டார்.

ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாமின் வலதுகரமாக திகழ்ந்தவரும், ஐஎஸ் அமைப்பின் எழுச்சிக்கு முக்கிய காரணம் என கருதப்பட்டவருமான இசட் இப்ராகிம் அல் டவுரி கொல்லப்பட்டுள்ளதாக ஈராக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பக்தாத்திற்கு வடக்கேயுள்ள சலாகுடின் பிராந்தியத்தில் இடம்பெற்ற மோதலிலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார். 72 வயதான அல்டவுரி ஐஎஸ் அமைப்பின் எழுச்சிக்கு முக்கிய காரணம் என கருதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா ஈராக்கைகைப்பற்றிய பின்னர் கைதுசெய்யப்படாமலிருந்த சில முக்கிய தலைவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களிலும் இவர் கொல்லப்பட்டுவிட்டதாக பல தடவைகள் தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், இதுவே மிகவும் உறுதியான தகவல் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அல்அராபியா தொலைக்காட்சி அவரது உடலின் படத்தை காண்பித்துள்ளது.
திக்கிரித்திற்கு கிழக்கே நடைபெற்ற மோதல் ஓன்றின் போதே இவர்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் ஐஎஸ் அமைப்பு ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றியதன் பின்னணியில் இவரேயிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.