செய்திகள்

சதாம் அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் தாரிக் அசீஸ் காலமானார்.

ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம்; அரசாங்கத்தின் சர்வதேச முகம் என வர்ணிக்கப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தாரிக் அசீஸ் சிறைச்சாலையில் காலமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
70 வயதான அசீஸ் வெளிவிவகார அமைச்சராக , துணைபிரதமராக பணியாற்றியதுடன் சதாமிற்கு மிகவும் நெருக்கமாக விளங்கியவர்.
சதாமின் ஆட்சியின் கீழ் சிறுபான்மை மதத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்காக இவரிற்கு 2010 இல் மரணதண்டனை விதிக்கப்பட்ட போதிலும் அது நிறைவேற்றப்படாமலிருந்தது, இந்நிலையில் அவர் காலமாகியுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1991 வளைகுடா யுத்தத்தின் போதே நன்கு அறியப்பட்ட தாரிக் ஓரு கிறிஸ்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.