செய்திகள்

சதிப்புரட்சி முயற்சி எதுவும் இடம்பெறவில்லை

ஜனவரி 8 ம் திகதி சதிப்புரட்சி முயற்சி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய அவ்வாறான முயற்சியில் ஈடுபட்டிருந்தால் சட்டமா அதிபரை அலரிமாளிகைக்கு அழைத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சட்ட மா அதிபர் அலரிமாளிகை;க்கு அழைக்கப்பட்டது உண்மை,சட்டம் ஓழுங்கை நிலைநாட்டுவது, மற்றும் ஊரடங்கு சட்டத்தை நிலைநாட்டுவது குறித்து ஆலோசனைசெய்வற்காகவே அவரை அழைத்தோம்,
தாங்கள் வெற்றிபெற்றால் உடனடியாக அலரிமாளிகையை சூழ்ந்துகொள்வோம் என எதிர்கட்சியினர் தெரிவித்திருந்தனர்,
இதன் காரணமாக சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியிருந்தது,சில உத்தரவுகளை வழங்கவேண்டியிருந்தது. சட்டமா அதிபர்,பொலிஸ் மா- அதிபர், இராணுவத்தளபதி ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
தற்போது இடம்பெறுவது அரசியல்பழிவாங்கல் முயற்சியே என அவர் குறிப்பிட்டுள்ளார்.