செய்திகள்

சந்திரிகாவின் மகன் அரசியலில் பிரவேசிக்கிறார்?

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளை ஏற்பாட்டில் நாளை  ஹொரகொல்லை விளாயாட்டு மைதானத்தில்  நடைபெறவுள்ள கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க கலந்து கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.

விமுக்தியை அறிமுகம் செய்யும் கூட்டமாகவும் இது அமையலாம். மேலும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன  மற்றும் சந்திரிகா ஆகியோர் முதன் முறையாக மேடை  ஏறவுள்ளதாகவும் தெரியவரகிறது.

அதே நேரம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடுமாறு விமுக்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.