செய்திகள்

சந்திரிகாவின் மகளை அரசியலில் களமிறக்க திட்டமிடும் மஹஜனகட்சி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் மகனை அரசியலில் களமிறக்கி பண்டாரநாயக்கவின் குடும்ப அரசியலை தக்கவைத்துக் கொள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சியினர் ஆலோசனை கூறினர்.

தேர்தல் நெருங்கிவரும் நிலையில் சந்திரிகாவின் மகன் விமுக்தி குமாரதுங்க அரசியலுக்கு வருவது தொடர்பில் அவர் முடிவெடுக்கவில்லை.

இந்நிலையில் சந்திரிகாவின் மகளான யசோதரா குமாரதுங்கவை எதிர்வரும் தேர்தலில் களமிறக்கலாம் என பண்டாரநாயக்கவின் பரம்பரை கட்சியான மஹஜன கட்சியின் உறுப்பினர்கள் சிலர் சந்திரிகாவிடம் தெரிவித்துள்ளனர்.

இதற்கு சந்திரிகா ‘அரசியலுக்கு வருவது அவர்களின் முடிவு’ என தெரிவித்துள்ளார்.