செய்திகள்

சந்திரிகாவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகவுக்கு எதிராக விமல் வீரவன்ச , வாசுதேவ நானயகார ஆகிய இருவரும் இன்று லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு தெரிவித்தனர்.

துறைமுக அதிகார சபையின் காணியொன்றை தனியார் கம்பனியொன்றுக்கு வழங்கியது தொடர்பாக சந்திரிகாவின் மீது நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்து.

ஆனால் ஏழு வருடங்கள் கடந்தநிலையிலும் இதுவரை அவருக்கு எதிராக எதுவித நடவடிக்கயைும் எடுக்கவில்லை என குறித்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.