செய்திகள்

சந்திரிகாவுக்கு தேர்தலில் களமிறங்க அழைப்புவிடுத்த ரணில்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்கி மீண்டும் அரசியலுக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு பிரதமர் ரணில் அழைப்புவிடுத்துள்ளார்.

ஐதேகவிலோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலோ போட்டியிடலாம் என்றும் ரணில் கேட்டுக் கொண்டுள்ளாராம்.

இவற்றுக்கு சந்திரிகாவின் மௌன சிரிப்பு மட்டுமே ரணிலுக்கு பதிலாக கிடைத்துள்ளது.

கொழும்பில் நடந்த கூட்டமொன்றில் ரணில் சந்திரிகாவுடன் இதுதொடர்பாக பேசியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.