செய்திகள்

சந்திரிகா – மகிந்த – மைத்திரி இன்று சந்திப்பு

சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு அதன் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை கூடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தனது டுவிட்டர் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இக்கூட்டத்தில் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்க்ஷ ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இவர்கள் மூவரும் ஒன்றாக சந்தித்துக்கொள்வது இது முதல் தடவையாகும்.