செய்திகள்

சந்தைகளில் காணப்படும் பற்பசை வகைகளை பரிசோதிக்க தீர்மானம்

நாட்டில் விற்பனை செய்யப்படும் பற்பசைகளின் தரத்தை பரிசோதிப்பதற்கு நுகர்வோர் அபிவிருத்தி அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

நாட்டில் சந்தைகளில் 15ற்கும் மேற்பட்ட பற்பசை வகைகள்விற்பனை செய்யப்படும் நிலையில் அவற்றின் தரம் தொடர்பாக பாவனையாளர்கள் மேற்கொண்டுள்ள முறைப்பாடுகளை அடிப்படையாக கொண்டே அந்த அதிகார சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

பற்கசைக்கென பயன்படுத்தப்படும் பதார்த்தங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.