செய்திகள்

சனல்-4 வெளியிட்ட புகைப்படத்தில் காணாமல் எனது மகன்: தாயார் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு

சனல்-4 வெளியிட்ட புகைப்படத்தில் காணாமல் போன எனது இரண்டு பிள்ளைகளில் ஒரு பிள்ளை இருப்பதாகவும் அவரைத் தேடித்தருமாறு அவரது தாயார் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான சாட்சிகளைப் பதிவுகள் மற்றும் புதிய பதிவுகளை மேற்கொள்ளுதல் கடந்த 25ம்திகதி முதல் இன்று வரை நடைபெற்றது.

இதில் மூன்றாம் நாளான நேற்று மாலை மேற்படி காணாமல் போனவரின் தாயார் ஆணைக்குழுவிடம் தனது புதிய முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

“தனது பிள்ளைகளாகிய திருநாவுக்கரசு சன்முகராசா(வயது 18 ) மற்றும் திருநாவுக்கரசு தர்மசீலன் (வயது 17) ஆகிய இருவரும் கடந்த 2008ம் ஆண்டின் இறுதியில் விடுதலைப்புலிகளால் பிடித்துசெல்லப்பட்டு கட்டாய சேட்பில் இணைக்கப்பட்டனர். அதன் பின்னர் நாங்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்ததால் பிள்ளைகளை காணவில்லை. அதன் பின்னர் நாங்கள் முகாம்களில் தேடியும் இன்று காணவில்லை என்றும்
பிள்ளைகள் பற்றிய பதிவுகளை மேற்கொண்டுள்ள போதும் எந்த பதிலும் இதுவரை இல்லை எனவும் இவர்களது தாயாராகிய சீதாலட்சுமி ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளித்தார்.

கடந்த மார்ச்மாதம் பத்திரிகையொன்றில் சனல் -4 வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் இன்னும் சில போராளிகளுடன் தனது மகன் திருநாவுக்கரசு சன்முகராசா (வயது 18) என்பவரை இராணுவம் கைகளைக் கட்டி உட்கார வைத்திருந்ததாகவும் அவரை கண்டுபிடித்து கொடுக்குமாறும் தயார் முறைப்பாட்டினைப் பதிவுசெய்துள்ளார்.