செய்திகள்

சபையில் பிரதமரை கெட்ட வார்த்தைகளால் திட்டிய வாசுதேவ

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ள ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் மகிந்த ஆதரவு எம்.பியுமான வாசுதேவ நாணயக்கார பிரதமரை சபையில் பிரயோகிக்கக்கூடாத படுமோசமான கீழ்த்தரமான வார்த்தைகளால் கோபாவேசத்துடன் திட்டித் தீர்த்துள்ளார்.
நேற்று சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிக்கொண்டிருக்கையில் சபையில் ஒழுங்கு பிரச்சினையொன்றை முன்வைத்து ”பொயின்ட் ஒப் ஓடர் ” என கூறிக்கொண்டு எழுந்த வாசுதேவ நாணயக்கார எம்.பி பிரதமரை பேச விடாது குழப்பிக்கொண்டிருந்தார்.
இதன்போது ஆசனத்தில் அமருமாறு அவருக்கு பிரதமர் கூற அதன்போது என்னை அமரசெய்ய உங்களால் முடியாது என கூறி தரக்குரைவான மற்றும் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி அவர் பிரதமரை திட்டியுள்ளார்.
இவ்வேளையில் கலரியில் பாடசாலை மாணவர்கள் இருப்பதாகவும் இதனால் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாமெனவும் சபாநாயகர் அவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறாயினும் பிரதமர் அந்த விடயத்தை நகைச்சுபையாக கையாண்டு இங்கு கதைக்க முன்னர் உங்கள் தாடியை வெட்டிக்கொண்டு வாருங்கள் என தெரிவித்துள்ளார்.