செய்திகள்

சபை கூடிய நோக்கம் நிறைவேறவில்லை: குழப்பத்தில் முடிந்த அமர்வு

அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக அனுமதி பெறுவதற்கென பாராளுமன்றம் இன்றைய தினம் கூடிய போதும் இது தொடர்பாக அனுமதி பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பாராளுமன்றம் எதிர்வரும் 9ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை விசேட அமர்வு ஆரம்பமான நிலையில் எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென்ற யோசனையினை முனவைத்து வந்த நிலையில் இன்றைய தினம் சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டமைக்கான நோக்கத்தை நிறைவேற்ற முடியாது போகவே எதிர்வரும் 9ம் திகதி வரை பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் 19ம் திகதி அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான அவர்களின் விருப்பங்களை சபையில் சமர்ப்பிப்பதாக பிரதமர் சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார்.