செய்திகள்

சமயங்களை ஒன்றிணைத்து சர்வமத பேரணி (படங்கள்)

தலவாக்கலை சத்தியசாயி சேவா நிலைய தலைவர் வைத்திய கலாநிதி பீ.கருணைராஜன் அவர்களின் தலைமையில் சமயங்களை ஒன்றிணைத்து சர்வமத பேரணி 19.05.2015 அன்று தலவாக்கலை நகரில் 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு 11 மணியளவில் நிறைவுபெற்றது.

இதன்போது அனைத்து மதங்களின் சார்ந்த மத தலைவர்களும், கல்வி திணைக்கள அதிகாரிகளும், பிரதேச மக்களும் கலந்து கொண்டதோடு சமய, கலை, கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.

இதன்போது சத்தியசாயி சேவா நிலையத் தலைவர் வைத்திய கலாநிதி வேலுகுரு கருணைராஜன் தெரிவிக்கையில்,

மதங்களுக்கிடையிலே இருக்கின்ற சமய விழுமியங்களை அனைத்து நபர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனைய மதங்களில் இருக்கின்ற கலாச்சாரங்களிலும் பின்பற்றும் வகையில் இன்றைய பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இதன் காரணமாக இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் மத்தியில் சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியும் என தெரிவித்தார்.

சத்திய சாயி பாபா இல்லத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்பேரணி தலவாக்கலை பஸ் நிலையத்திற்கு சென்று மீண்டும் தலவாக்கலை கதிரேசன் ஆலயத்தை வந்தடைந்தமை குறிப்பிடதக்கது.

DSC09297

IMG_1403

IMG_1404

IMG_1417

IMG_1418

IMG_1422

IMG_1424

IMG_1426

IMG_1433

IMG_1435

IMG_1438

IMG_1439

IMG_1449

IMG_1464