செய்திகள்

சமிந்தவாஸ் பயிற்றுவிப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார்

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த சமிந்த வாஸ் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இலங்கை அணி இன்று இரவு மேற்கிந்தியா தீவுகள் நோக்கி பயணமாகவுள்ள நிலையிலேயே அவர் பதவி விலகியுள்ளார்.

இதனால் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தில் அவர் கலந்துகொள்ளமாட்டார்.

மார்ச் 26 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
தனது சம்பள கொடுப்பனவுகள் தொடர்பான விடயங்களை அடிப்படையாக கொண்டே அவர் விலகியுள்ளார். -(3)