செய்திகள்

சமுர்த்தி நிதிய முறைக்கேடுகள் தொடர்பில் அமைச்சர் சஜித்துக்கு நீதிமன்றம் கட்டளை

சமுர்த்தி நிதியத்தை முறைக்கேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாஸவை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உயர்நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட குழுவினருக்கே நீதிமன்றம் மேற்கண்டவாறு கட்டளை பிறப்பித்துள்ளது. சமுர்த்தி பயனாளிகள் சார்பில் மேல் மாகாண சபையின் உறுப்பினர் ஜகத் குமாரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்து கொண்டபோதே உயர்நீதிமன்றம் மேற்கண்ட கட்டளையை நேற்று பிறப்பித்துள்ளது.

சஜித் பிரேமதாஸ தன்னுடைய அரசியல் நண்பர்களுக்கு கூடுதலாக பகிர்ந்தளிப்பதாகவும் இதனூடாக சமுர்த்தி பயனாளிகளின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் சஜித் பிரேமதாஸ சமுர்த்தி பயனாளிகளின் அடிப்படை உரிமையை மீறிவிட்டார் என்று தீர்ப்பளிக்குமாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது