செய்திகள்

சமூகத்திலிருந்து கொரொனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படுவது மிகவும் குறைந்துள்ளது – சுகாதார அமைச்சர்

சமூகத்திலிருந்து கொரொனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படுவது மிகவும் குறைந்துள்ளது என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, பொருளாதாரத்தை விட, மக்களின் உயிர்கள் முக்கியமென கருதி, அரசு நாட்டை முடக்கி வைத்திருந்ததாலேயே இந்த நிலைமை ஏற்பட்டது என்றும் நாட்டை மீண்டும் வழமை நிலைமைக்கு கொண்டு வருவது பற்றி சிந்திப்பதற்கான காலம் கனிந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

கொட்டாஞ்சேனையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண், 14 நாட் தனிமைப்படுத்தலை முடித்தவர். அவருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பது பற்றி பல்வேறு தகவல்கள் கூறப்படுகிறது. கடந்த 12ஆம் திகதி இந்தியாவிலிருந்து வருவதற்காக விமானத்தில் ஏறியபோது அவருக்கு அருகில் வெளிநாட்டவர் ஒருவர் இருந்துள்ளார். அவருக்கு கடுமையான இருமல் இருந்தது. அவர் மூலம் தொற்று ஏற்பட்டிருக்கலாம்.கடந்த 6 நாட்களாக யாரும் வைத்தியசாலையில் சேர்க்கப்படவில்லை. இந்தப் பெண் மாத்திரமே அனுமதிக்கப்பட்டு, தொற்று உறுதியானது.

ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார பிரச்சனைகளிற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஊரடங்கின் மூலம் நாட்டை தொடர்ந்து மூடி வை்த்திருக்கலாமென நாம் கருதவில்லை. ஊரடங்கை இரத்து செய்து, மீண்டும் வழமை நிலையை ஏற்படுத்தலாமென எதிர்பார்க்கிறோம்.கடந்த சில நாட்களாக சமூகத்திலிருந்து குறைந்தளவானவர்களே கண்டுபிடிக்கப்பட்டனர். தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்தே அதிகளவானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)