செய்திகள்

சமூக செயற்பாட்டாளர் டிராபிக் ராமசாமிக்கு மகள் விஜயாவின் வேண்டுகோள்

அரசியில் மிரட்டலுக்கோ அதிகார பயமுறுத்தலுக்கோ அஞ்சாமல் மக்கள் நலனுக்கான தொடர் செய்றாடுகளை மேற்கொண்டு வரும்  டிராபிக் ராசாமி கைதுசெய்யப்ட்டமையும் உடல் நலக்குறைவுற்றமையையும் தொடர்ந்து பல கருத்துகள் சமூகவலைத்தளங்களை நிரப்பி வருகின்றன.
முதிய வயதில் அவர் எதிர்நோக்கி வரும் சவால்களை விட்டு குடும்பதோடு இணைய வேண்டி அவர் மகள் விஜயா உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்

‘அப்பா, ஒரு பொம்பளைப் புள்ளைக்கு அப்பான்னா எவ்வளவு ஆசை இருக்கும். அதுவும் ஒத்தப் பிள்ளை நான். அதைக்கூட ஆராதிக்க உங்களுக்கு நேரம் இருந்ததில்லை. எனக்கு நினைவு தெரிஞ்சு, நீங்க என்னை தூக்கிக் கொஞ்சினது இல்லை. இந்த நாட்டை திருத்தவே முடியாது. இங்கே யாருக்கும் குறைந்தபட்ச மனசாட்சி கூட கிடையாது. டிவிட்டரில், வாட்ஸ் அப்பில் பாராட்டுவாங்க. ஆனா, பிரச்சினைன்னா விட்டுட்டு ஓடிடுவாங்க. பணம், காசு எதுவும் எங்களுக்கு வேண்டாம். நீங்க உசுரோட வந்தா அதுபோதும். என்னைதான் தூக்கி வெச்சி கொஞ்சலை. உங்க பேரப் பிள் ளைங்க ரொம்ப எதிர்பார்க்குது. வந்துடுங்கப்பா…’’ என உருக்கமாக வேண்டுகோளை விடுத்துள்ளாh

  இதற்கு கருத்து தெரிவித்த ராமசாமி “அவங்களுக்கு பிரச் சினை வேண்டாம்னுதான் குடும்பத் தைவிட்டு ஒதுங்கிட்டேன். எனக்கு மட்டும் பாசம் இல்லையா? ஆனா, அவங்க மட்டுமா என் குடும்பம்? இந்த சமூகமே என் குடும்பம் இல்லையா… நான் பெத்த குழந்தைகளை படைச் சவன் பார்த்துப்பான்…” என்றார்.

கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை முழுக்க நாள்தோறும் அரசியல் கட்சியினரின் பிளக்ஸ் விளம்பர போர்டுகளாலும், விண்ணைத் தொடும் கட் அவுட்களாலும், பல வண்ண விளம்பர போர்டுகளாலும்  ஏற்பட்ட போக்குவரத்து இடையூறுகள்   அகற்ற  நீதிமன்றம் வரை  சென்று வாதாடி, தனி ஒருவராக அப்போதைய திமுக அரசை எதிர்த்து சட்டப் போர் நடத்தி வெற்றியைப் பெற்று வந்தவர் டிராபிக் ராமசாமி. அதே போல தொண்ணூறுகளில் சென்னையின் உயிர் பறிக்கும்  மூன்று சக்கர எமனாகக் கருதப்பட்ட ஹட்ரை சைக்கிள்ஹ எனப்படும் மீன்பாடி வண்டிகளின் அட்டகாசத்தை சட்டத்தின் துணையோடு ஒழித்தவரும்  இவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.