செய்திகள்

சமூக வலைதளங்களில் புகுந்தது பா.ஜ.,

ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் சமூக வலைதளங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ய துவஙகிவிட்டன. தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்கள் மூலமாக தீவிரமாக பிரசாரம், பேச்சு, பேட்டி அறிக்கைகளை வெளியிடுகின்றன.

இதற்கு போட்டியாக தேசிய கட்சியான பா.ஜ.வும் களம் இறங்கியுள்ளது. சமூக வலைதளங்களில் தனது பிரசாரத்தினை வீடியோ மூலம் துவக்கி உள்ளது. அந்த வீடியோவில் தமிழகத்தில் மலிந்து கிடக்கும் ஊழல், மது விற்பனை ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள அவலநிலையை போக்கி, மாற்றத்திற்கான நேரம், வளர்ச்சிக்கான நேரம், இளைஞர்களுக்கான நேரம், புதிய அரசுக்கான நேரம் என மத்தியில் மோடி ஆட்சியின் சாதனைகளை விளக்கியுள்ளது.

தவிர நாட்டின் வளர்ச்சியை விளக்கியும், விவசாயத்தி்ல் புதுமை, பொருளாதார புரட்சி, கல்வியில் புதுமை ஆகியவற்றை விளக்கியும் அந்த வீடியோவில் பிரசாரத்தை துவக்கியுள்ளது.

N5