செய்திகள்

சமூக வலைத்தளங்களில் வித்தியாவின் படங்களை வெளியிட வேண்டாம்!

புங்குடுதீவில் கூட்டு பாலியல் வன்கொடுமையின் பின் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வித்தியாவின் படங்கள் வெளியிடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொலைக்கு கண்டனம் தெரிவித்தும் வவுனியா பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வித்தியாவின் புகைப்படங்களை வெளியிடும் நபர்களை தண்டிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.