செய்திகள்

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை!

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
உலகச் சந்தையில் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக லாப் கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தீர்மானம் எடுக்கும் அதிகாரம் நுகர்வோர் அதிகார சபைக்கே உள்ளது.
எவ்வாறாயினும் இது தொடர்பாக இன்றைய அமைச்சரவையில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)