செய்திகள்

சம்பூரின் காணிகளை பொதுமக்களிடம் வழங்க முடிவு

திருகோணமலை சம்பூரில் 1052 ஏக்கர் காணி எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதியன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படும் அதேவேளை சம்பூரில் முதலீட்டு வலயத்துக்காக ஒதுக்கப்பட்ட 814 ஏக்கர் காணி சொந்தக்காரர்களிடம் கையளிக்கப்பட்டு 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு மீள்க்குடியேற்றப் படவுள்ளதாக மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அதியுயர் பாதுகாப்பு வலயமாக கடற்படையினரால் பயன்படுத்தப்படும் 234 ஏக்கர் காணிக்கு பதிலாக வேறு காணி கடற்படையினருக்கு வழங்கப்பட்டு குறித்த காணி பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவையும் வழங்கியுள்ளது.
திருகோணமலை சம்பூரில் பொதுமக்களை மீளக்குடியேற்றம் செய்வது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோவின் தலைமையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற வேளை  அமைச்சர்  தெரிவித்தார்.