செய்திகள்

சம்பூரில் 177 ஏக்கர் காணி இன்று பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது

சம்பூரில் கடற்படையினர் நிலைகொண்டிருந்த மீள்குடியேற்றக் கிராமத்திற்கு சொந்தமான 177 ஏக்கர் காணி இன்று பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த காணியை மக்களிடம் கையளிப்பதற்கான வைபவம் முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக திருகோணமலை மாவட்ட செயலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

காணியை கையளிப்பதற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் மேற்கொண்டுள்ளது.

சம்பூரில் கடற்படையினர் வசமிருந்த 237 ஏக்கரில் 60 ஏக்கர் காணி ஏற்கனவே பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த பகுதியிலிருந்த சம்பூர் மகா வித்தியாலயமும் புனரமைக்கப்பட்டு மீண்டும் இயங்கக்கூடிய நிலையில் பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

2006 ஆம் ஆண்டில் சம்பூரிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் சுமார் 10 ஆண்டுகளின் பின்னர் அந்த காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

n10