செய்திகள்

சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

சம்பூர் தொடர்பில் பல தரப்பினரிடையும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் பழங்குடியினத்தவர்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை சம்பூர் சந்தோசபுர சிவசக்தி வித்தியாலயத்திற்கு முன்பாக பழங்குடி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்றைய தினம் முன்னெடுத்திருந்தனர்.

அனல் மின் நிலையம் அமைக்கப்படுமாயின் தாம் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடும் எனத் தெரிவித்தும் அனல் மின் நிலைய திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் ஆதிவாசிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

அனல் மின் நிலையம் உருவாக்கப்படுமாயின் கடற்றொழில் பாதிக்கப்படுவதுடன் தாம் பல்வேறு நோய்த்தாக்கங்களுக்கு உள்ளாக வேண்டிய நிலை உருவாகும் என ஆதிவாசிகள் எதிர்ப்பை வௌிப்படுத்தினர்.

n10