செய்திகள்

சம்பூர் காணி உடன்படிக்கை: ரத்துச் செய்தார் ஜனாதிபதி

முதலீட்டு சபையினால் முதலீட்டு திட்டம் ஒன்றுக்காக கையகப்படுத்தப்பட்டிருந்த சம்பூரில் உள்ள காணிப்பகுதிக்கான உடன்படிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இரத்துச்செய்யப்பட்டது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி பத்திரத்தில் ஜனாதிபதி நேற்று மாலை கைச்சாத்திட்டார். இதனையடுத்து குறித்து காணி இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள்குடியேற்றத்துக்கு பயன்படுத்தப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.