செய்திகள்

சம்பூர் நிலக்கடலை தோட்டத்தில் புலிக்கொடியுடன் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு சொந்தமான  அம்மன் நகர் கிராமத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை பகல்  பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இந்த ஆயுதங்கள்  தனியார் காணியொன்றிலுள்ள நிலக்கடலை தோட்டத்திலிருந்தே மீட்கப்பட்டுள்ளது.
இதன் போது மிதிவெடி, புலிக்கொடி, ரீ56ரக மெக், எஸ்.ஜீ.ரவுண்டஸ், கிரனைட், கிளைமோர், டெட் நைட்டர், ஆட்லரி சாச்சர் கூர், டொம்பா ரவுண்ஸ், கிளைமோர் ரிமோட், மோட்டார்கன் பியூஸ், ரீ56 துப்பாக்கி ரவைகள் 1069 போன்றன மீட்டகப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
சம்பூர் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவ் ஆயுதங்களை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.