செய்திகள்

சம்பூர் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியுடன் சம்பந்தன் இன்று பேச்சு: தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை

சம்பூர் மீள்­கு­டி­யேற்றம் சம்­பந்­த­மாக ஜனா­தி­ப­தி­யுடன் உயர்மட்டப் பேச்­சு­வார்த்­தை­யொன்று நடை­பெ­ற­வுள்­ளது. இந்தப்பேச்­சு­வார்த்­தையின் போது முடி­வொன்றை காண்பேன் என்று தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

சம்பூர் மீள்­கு­டி­யேற்றம் சம்­பந்­த­மாக பட்­டித்­திடல் கிளி­வெட்டி முகாம்­களில் தங்­கி­யி­ருக்கும் சம்பூர் மக்­க­ளு­ட­னான விஷேட சந்­திப்­பொன்று நேற்­றைய தினம் இடம்­பெற்­றது. இச்­சந்திப்­பின்­போதே சம்­பந்தன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். மக்கள் மத்­தியில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

“சம்பூர் மக்­களின் மீள்­கு­டி­யேற்றப் போராட்டம் இறு­திக்­கட்­டத்­துக்கு வந்­துள்­ளது. இது எவ்­வாறு எனில் ஓட்­டப்­பந்­த­ய­மொன்றில் முடி­வுப்­புள்­ளியை நோக்கி ஓடு­வது போன்­ற­தாகும். உங்­க­ளு­டைய போராட்­டத்­திற்கு வெற்றி கிடைத்­துள்­ளது. அடுத்த வார முதற் பகு­தியில் நீங்கள் குடி­யேற்­றப்­ப­டு­வீர்கள்.

இன்று காலை ஜனா­தி­ப­தி­யு­ட­னான உயர்­மட்­டப்­பேச்­சு­வார்த்­தை­யொன்று சம்பூர் மீள்­கு­டி­யேற்றம் சம்­பந்­த­மாக இடம்­பெ­ற­வுள்­ளது. நாமும் மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்­ணான்டோ ஆகியோர் ஜனா­தி­ப­தியை சந்­திக்­க­வுள்ளோம். ஜனா­தி­ப­தி­யு­ட­னான இன்­றைய சந்­திப்பில் சம்பூர் மீள்­கு­டி­யேற்றம் சம்­பந்­த­மாக ஒரு முடி­வைக்­காண்பேன். நீங்கள் மறு­வாரம் குடி­யேற்­றப்­ப­டு­வீர்கள். குடி­யேறும் போது நானும் அங்கு வருவேன்.

ஜனா­தி­ப­தியின் உத்­த­ர­வுக்கு அமைய நாளை அல்­லது நாளை மறு­தினம் முத­லீட்டு வல­யத்­துக்கு தாரை வார்த்­துக்­கொ­டுக்­கப்­பட்ட சம்பூர் காணி 818 ஏக்­கரும் வர்த்­த­மானி மூலம் இரத்து செய்­யப்­பட்டு பொது­மக்­க­ளுக்கு கைய­ளிக்­கப்­படும். இதே­போன்றே இவ்­வார முடி­விலோ அல்­லது அடுத்த வார முற்­ப­கு­தி­யிலோ கடற்­படை முகா­மி­ருக்கும் காணி­களும் மக்­க­ளுக்­காக விட்­டுக்­கொ­டுக்­கப்­படும்.

கடற்­ப­டை­யினர் கடற்­க­ரை­யண்­டிய பகு­திக்கு இட­மாறிச் செல்­ல­வி­ருக்­கி­றார்கள் என்ற நல்ல செய்­தி­யையும் உங்­க­ளுக்கு தெரி­விக்க விரும்­பு­கின்றேன். கடற்­ப­டை­யி­ன­ருக்கு ஒதுக்­கப்­பட்­டி­ருக்கும் காணி அரச காணியே தவிர மக்­க­ளு­டைய காணிகள் அல்ல என்­ப­தையும் தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இன்னும் சில வாரங்­களில் கடற்­படை முகா­மி­ருந்த 237 ஏக்கர் நிலத்­திலும் மக்கள் குடி­யேற்­றப்­ப­டு­வார்கள்.

நீங்கள் வன்­மு­றைக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருக்­கி­றீர்கள், பல்­வேறு வித­மான கஷ்­டங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருக்­கி­றீர்கள். உங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட உணவு வேண்­டு­மென்றே நிறுத்­தப்­பட்­டது அப்­ப­டி­யி­ருந்தும் உங்கள் சொந்த மண்­ணுக்கு போக வேண்­டு­மென போராடி வந்­தி­ருக்­கி­றீர்கள். நீங்கள் தொடர்ந்து போரா­டி­யதன் கார­ண­மா­கவே நல்ல முடி­வொன்று கிடைத்­தி­ருக்­கி­றது. உங்கள் உறுதி குலைந்­தி­ருக்­கு­மாயின் நீங்கள் வேறு இடத்தில் குடி­யே­றி­யி­ருப்­பீர்கள். ஆனால் நீங்கள் போராடி இன்­றைய வெற்­றியை பெற்­றி­ருக்­கி­றீர்கள்.

நான் சம்பூர் குடி­யேற்றம் சம்­பந்­த­மாக பாரா­ளு­மன்­றத்தில் பல­முறை இறுக்­க­மாக பேசி­யி­ருக்­கிறேன். நீங்கள் சம்பூர் மக்­களை மீள் குடி­யேற்­ற­வில்­லை­யாயின் அந்த மக்­களை ஏன் வற்­பு­றுத்­து­கி­றீர்கள் எனப் பாரா­ளு­மன்­றத்தில் கேட்­டி­ருக்­கிறேன். அப்­பொ­ழு­தெல்லாம் அர­சாங்கம் எனக்கு வாக்­கு­று­தி­ய­ளித்­தது. சம்பூர் மக்­களை மீள்­கு­டி­யேற்­றுவோம் அவர்­களை மாற்று இடத்­துக்கு கொண்டு செல்­ல­மாட்­டோ­மென்று கூறி­னார்கள். நீங்கள் காட்டி வந்த உறு­தி­யான நிலைப்­பாடே இன்­றைய இந்த வெற்­றிக்கு கார­ண­மாக இருக்­கி­றது.

நீங்கள் அமைதி காக்க வேண்டும், குழப்பி விடக்­கூ­டாது, நீங்கள் உங்கள் சொந்­தக்­கா­ணியில் குடி­யேறும் காட்­சியை காண நானும் வருவேன். போராட்­டத்தின் கடை­சிக்­கட்­டத்­துக்கு வந்­தி­ருக்­கின்றோம். ஓட்­டத்தின் முடிவை எட்­டிக்­கொண்­டி­ருக்­கிறோம் என்­பதை சம்பூர் மக்­க­ளா­கிய நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எந்த வித­மான பிரச்­சி­னைகள் வரு­கின்ற போதும் அதை ஜனா­தி­ப­தி­யுடன் பேசித்­தீர்க்க நான் தயாராக இருக்கின்றேன்.

சம்பூர் மீள்குடியேற்றம் சம்பந்தமாக பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்பட்டிருந்தபோதும் அதற்கு முடிவு காணப்பட்டுள்ளது. இன்றைய தினமோ நாளைய தினமோ வர்த்தமானி அறிவித்தல் மூலம் சம்பூர் விடுவிக்கப்பட்ட செய்தியை அறிவீர்கள் என சம்பந்தன் தெரிவித்தார். இவ்விஷேட சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் க. துரைரட்ணசிங்கம் பிரதேச சபை உறுப்பினர் நாகேஸ்வரன் மற்றும் திருச்செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.