செய்திகள்

சரக்கு ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் கவலைக்கிடம் ( வீடியோ)

அட்டன் மல்லியப்பு பகுதியில் சரக்கு ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டியிலிருந்து நானுஓயா நோக்கிப் பயணித்த சரக்கு ரயிலில் 09.05.2015 இன்று மாலை 4.30 மணியளவில் இவர் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு ரயிலில் மோதிய பெண் 35 வயதுடைய செல்வராஜா ரஞ்சனி டிக்கோயா தரவளை பகுதியை சேர்ந்தவா் என தெரியவந்துள்ளது.

குறித்த பெண் கவலைக்கிடமாக இருப்பதன் காரணமாக கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிக்கோயா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பெண் மோதுண்டாரா? அல்லது பாய்ந்தாரா? என அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=Y2bepIIousM&feature=youtu.be” width=”500″ height=”300″]