செய்திகள்

சரத் பொன்சேகா அடுத்த வாரம் எம்.பி.யாகிறார்?

ஜனநாயகக் கட்சித் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா அடுத்த வாரத்தில் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவிருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

அக்கட்சியின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்தகெட்டகொட பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்துள்ள நிலையில் கட்சியின் பட்டியலில் அடுத்தபடியாக இருப்பவர் சஞ்ஜீவ கந்தனாராச்சி ஆவார். அவர் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள சத்தியக் கடதாசியில் தனக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஜெனரல் சரத் பொன் சேகாவுக்கு விட்டுக்கொடுக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஜயந்த  கெட்ட கொடவுக்கு அடுத்த படியாக விருப்பு வாக்குப் பட்டியல் இருப்பவர் இணக்கம் தெரிவித்தால் சரத் பொன்சேகா பாராளுமன்றப் பிரதிநிதியாக நியமனம் பெறுவதற்கு சட்டத்தில் தடையெதுவும்  கிடையாதென சட்டமா அதிபர்  திணைக்களம் தேர்தல் ஆணையாளருக்கு தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் ஜெனரல் பொன்சேகா அடுத்தவாரத்தில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவிருப்பதாக  ஜனநாயகக் கட்சி  தெரிவித்துள்ளது.