செய்திகள்

சரத் பொன்சேகா பீல்ட் மாஷலானார்! பாதுகாப்பு அமைச்சு முன்பாக விஷேட நிகழ்வு

முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகா பீல்ட் மார்ஷல் தரத்துக்கு இன்று பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

பொன்சேகாவே முதன் முதலில் இந்த விருதினை இலங்கையில் முதன் முதலில் பெறுகிறார். வாழ் நாட் தகவுடைய இந்த விருது ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு நிகரானது என்பதுடன் முப்படைகளிலும் உலகில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும்.