செய்திகள்

சரேயிலும் சாதிக்கும் சங்கா

இம்முறை முதல் முறையாக சரே பிராந்திய அணியில் விளையாடும் வாய்ப்பினை பெற்றுள்ள சங்கக்கார நேற்றைய தினம் ஆரம்பமான போட்டியில் சதத்தினை விளாசியுள்ளார்.
மூன்றாவதாக களமிறங்கிய சங்கக்கார முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்த போது ஆட்டமிழக்காமல் 112 ஓட்டங்களை விளாசியிருந்தார்.
இதில் 14 நான்கு ஓட்டங்களும் 1 ஆறு ஓட்டமும் அடங்கும். அத்துடன் சக வீரரான ஸ்டீபன் டேவிஸுடன் இணைந்து 213 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.