செய்திகள்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ள சூடான் ஜனாதிபதி விவகாரம்

நியுயோர்க் டைம்சுக்காக சோமினி சென்குப்தா எழுதிய கட்டுரை ( தமிழில்  சமகளம் செய்தியாளர்) 

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 2002 இல் பலத்த எதிர்பார்ப்புகளுடன் உருவாக்கப்பட்டது.மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் இனப்படுகொலைகளில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதே அது ஏற்படுத்தப்பட்டதின் நோக்கம்.

ஆனால் இதுவரை அதனால் பாதுகாப்பதற்கு வலுவான நண்பர்கள் இல்லாதவர்களையே தண்டிக்க முடிந்துள்ள, சர்வதேச சட்டத்தின் கரத்தினால் அவ்வாறன நபர்களை மாத்திரம் கைதுசெய்ய முடிந்துள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பலவீனத்தை மிகவும் கசப்பான விதத்தில் சூடான் ஜனாதிபதி ஓமர் ஹசன் அல் பசீரிற்கு எதிரான வழக்கு உணர்த்தியுள்ளது.குற்றவியல் நீதிமன்றம் வலிமையற்ற ஓரு அமைப்பாக இருப்பதற்கான காரணத்தையும் அது புலப்படுத்தியுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் பசீர் போன்ற பதவியிலிருக்கும் ஜனாதிபதிகள் மீது கூட குற்றச்சாட்டுகளை சுமத்த முடியும், ஆனால் அவர்களை கைசெய்து சிறையிலடைக்கும் அதிகாரம் அதற்கில்லை.

sudans-president-omar-hassan-al-bashir
இதற்கு பதில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏனைய நாடுகளின் தலைவர்களை நம்பியிருக்க வேண்டிய நிலையிலுள்ளது. சர்வதேச அளவில் அவர்கள் சட்டத்தின் பாதுகாவலர்களாக செயற்படுவார்கள் என எதிர்பார்க்கவேண்டிய நிலையிலுள்ளது.

ஆனால் கடந்த ஆறு வருடங்களாக பல உலக நாடுகளின் தலைவர்கள் பசீர் நீதழமன்றத்தின் பிடியாணையை அலட்சியம் செய்வதற்கு உதவியுள்ளனர்.

திங்கட்கிழமை இதற்கு சிறந்த உதாரணம்.தென்னாபிரிக்க நீதிமன்றம் பசீரை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்த போதிலும் தென்னாபிரிக்கா அவர் தப்பியோடுவதற்கு அனுமதித்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு வலுவான ஆதரவை வழங்கிய நாடு தென்னாபிரிக்கா அதன் ஸ்தாபக உறுப்பு நாடுகளில் அதுவும் ஒன்று என சுட்டிக்காட்டும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் தலைமை வழக்கறிஞர் பட்டு பென்சவுன்டா எனினும் தென்னாபிரிக்கா தற்போது அந்த நிலைப்பாட்டை மாற்றியது என்பது தெரியவில்லை எனக்குறிப்பிடுகின்றார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் சந்தேகநபர்களை கைதுசெய்ய முடியாத நிலை காணப்படுவதை சுட்டிக்காட்டும்,சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னாள் சட்டத்தரணி அலெக்ஸ் வைட்டிங், அது எவ்வளவு தூரம் செயற்பட முடியும் என்பது சர்வதேச சமூகம் எவ்வளவு தூரம் அனுமதிக்கின்றது என்பதே தீர்மானிக்கின்றது என்கிறார்.

பசீர் விஜயம் மேற்கொள்வதற்கும், தப்பிவெளியேறுவதற்கும் சமீபத்தில் அனுமதித்த நர்டு தென்னாபிரிக்கா.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆபிரிக்கர்களை மாத்திரம் இலக்கு வைக்குகின்றது என்ற எண்ணத்தை உடைப்பதற்கு நீதிமன்றம் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பதை இது புலப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

உலகின் வலிமை வாய்ந்த நாடுகள் தீவிர அக்கறை காட்டாவிட்டால் நீதியை நிலைநாட்டுவது எவ்வளவு தூரம் சாத்தியமில்லை என்பதையும் இது சுட்டிக்காட்டுகின்றது என்கிறார் அவர். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையும்,அமெரிக்கா போன்ற நாடுகளும்,அவரை கைதுசெய்வதற்கு முன்னுரிமை அளித்து செயற்பட்டால் மாத்திரமே அவர் இறுதியில் கைதுசெய்யப்படுவார் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

அமெரிக்காவால் ஏனைய நாடுகளை இந்த விடயத்தில நேர்மையாக செயற்படுமாறு அழுத்தங்களை கொடுக்க முடியும்,ஆனால் அதன் நம்பகத்தன்மை குறித்தே பல கேள்விகள் உள்ளன.உலகின் சக்திவாய்ந்த தேசங்களான அமெரிக்கா, சீனா,ரஸ்யா போன்றவை இன்னமும் சர்வதேச நீதழமன்றத்தில் இணைந்துகொள்ளவில்லை என்பது முக்கியமான விடயம்.இந்த நாடுகள் குற்றவியல் நீதிமன்றத்தின் ஆணையை இதன் மூலம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.

2011 இல் பசீர் சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டார்,அங்கு அவரிற்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது, அவர் சீனா ஜனாதிபதியையும் சந்தித்தார்.அவ்வேளை சீனா ஜனாதிபதியாக பதவிவகித்தவரை நண்பர் , சகோதரர் என்றார் பசீர்.

பசீர் தொடர்பான சமீபத்தைய நாடகம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை மேலும் பலவீனப்படுத்தி விட்டதாக தெரிவிக்கும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மார்க் எலிஸ்,ஆனால் அதற்கு காரணம் சர்வதேச நீதிமன்றம் இல்லை என்கிறார்.

உலகின் வலிமையான நாடுகள், தங்களையும் தங்களது நேசநாடுகளையும் நீதியின் கரம் தீண்டாத விதத்திலேயே இந்த நீதிமன்றத்தை உருவாக்கியிருந்தன என தெரிவிக்கும் அவர் இதன் காரணமாக தாங்கள் நீதியற்ற விதத்தில் இலக்குவைக்கப்படுகின்றோம் என ஆபிரிக்க தலைவர்கள் தெரிவிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது என்றும் தெரிவிக்கின்றார்.

முக்கிய அரசியல் சக்திகளாக திகழும் நாடுகள் அதனை ஏற்றுக்கொள்ளாததன் காரணமாகவே சர்தேச குற்றவியல் நீதிமன்றம் பலவீனப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இதுவரை 30 பிடியாணைகளை பிறப்பித்துள்ளது ஆனால் இருவர் மாத்திரமே தண்டிக்கப்பட்டுள்ளனர்.பசீர் போன்ற பலர் கைதுசெய்யப்படுவதிலிருந்து தப்பியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை டார்ப+ர்- விவகாரத்தை 2005 இல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தது,அதன் தொடர்ச்சியாக பசீர் மீது யுத்தக்குற்றச்சாட்டுகள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை குறித்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன, எனினும் அதற்கு பிந்திய காலங்களில் அவரை கைதுசெய்வதற்கு பாதுகாப்பு சபை நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.பசீர் கென்யா, சாட், நைஜீரீயா போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்தார், கைதுசெய்யப்படாமல் தப்பினார்.

iccc
அமெரிக்காவின் நெருங்கிய சகாக்களான சாட் மற்றும்நைஜீரியா ஆகிய இரண்டும் பாதுகாப்பு சபையின் தற்காலிக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டன.அதேவேளை பசீரின் நண்பர்களான சீனா, ரஸ்யா நிரந்தர உறுப்புரிமை பெற்ற, வீட்டோ அதிகாரம் மிக்க நாடுகளாக காணப்பட்டன.

பசீரை போன்று வலிமையற்ற பலரை நீதிமன்றம் கைதுசெய்துள்ளது. நீண்ட கால யுத்தகுற்றச்சாட்டுகளுக்கு உள்ளான உகண்டாவின் ஆயுத குழுவொன்றின் தளபதியான டொமினிக் ஓங்வென் சமீபத்தில்கைதுசெய்யப்பட்டார்.அவர் கைதுசெய்யப்பட முடியாதவர் என கருதப்பட்டவர்.ஐவரி கோஸ்டின் முன்னாள் தலைவர் ,கென்யாவின் உப ஜனாதிபதி ஆகியோரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு புறம்பாக இயங்கும் தீர்ப்பாயங்கள் முக்கிய தலைவர்களை கைதுசெய்துள்ளன.ருவாண்டா, சியாரோலியோன்,முன்னாள் யுகொஸ்லாவியா போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள்.

எனினும் உலகின் செல்வாக்கு மிக்க தேசங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை தங்களது நலநன முன்னெடுப்பதற்காக மாத்திரம் பயன்படுத்துவதால் அது சர்ச்சைக்குரிய விடயமாகியுள்ளது.

கடந்த வருடம் பிரான்ஸ் சிரியா விவகாரத்தை பாதுகாப்பு சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முயன்றது, அமெரிக்காவின் ஆதரவும் அதற்கு காணப்பட்டது.எனினும் எதிர்பார்த்ததை போல சிரியாவின் நண்பனான ரஸ்யா அதனை தனது வீட்டேத அதிகாரத்தை பயன்படுத்தி தடைசெய்தது.

பாலஸ்தீனம் தனது அரசியல்நோக்கங்களை முன்னகர்த்துவதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்தது.வழமையாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஆதரிக்கும் பிரான்ஸ் பாலஸ்தீனத்தின் முடிவு குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை.அமெரிக்கா பாலஸ்தீனத்தின் முடிவை கண்டித்தது.